பிள்ளையார்பட்டி சிறப்பு சுற்றுலா
சென்னை: தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு சுற்றுலா அறிவிக்கப்பட்டு உள்ளது.வாலாஜா சாலையில் உள்ள, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்தில் இருந்து, செப்., 1ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, பிள்ளையார்பட்டிக்கு பஸ் புறப்படும். தாம்பரத்தில் இருந்தும் ஏறலாம்.
மறுநாள் காலை, திருச்சி தமிழ்நாடு ஓட்டலில், குளியல், உணவு வழங்கப்படும். காலை, 10:00 மணிக்கு, பஸ் பிள்ளையார்பட்டி சென்றடையும். காலை, 10:30 முதல் மதியம், 1:15 மணி வரை, கோவில்தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
மதியம், 1:30 மணிக்கு, அங்கிருந்து புறப்பட்டு, மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் கோவிலுக்கு, அழைத்து செல்லப்படுவர். இரவு உணவு, சமயபுரத்தில் வழங்கப் படும். மறுநாள் காலை, 6:00 மணிக்கு, சென்னைவந்தடையும்.சுற்றுலா கட்டணமாக, பெரிய வர்களுக்கு, 2,600 ரூபாயும், 6- - 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு, 1,300 ரூபாயும் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.
சுற்றுலா செல்ல விரும்புவோர், www.ttdconline.com என்ற இணைய தள முகவரியிலும், மொபைல் முன்பதிவிற்கு, www.mttdonline.comஎன்ற முகவரியிலும் முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 044- 2533 3333, 2533 3444, 2533 3850- ஆகிய தொலைபேசி எண்களிலும், 1800 4253 1111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், www.tamilnadutourism.org என்ற இணையதள முகவரி யிலும் தொடர்பு கொள்ளலாம்.