அன்னுார் பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம்
ADDED :2231 days ago
அன்னுார்:அன்னுார், கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், தினசரி நடக்கும் பூஜைகளில் உலக நன்மைக்காகவும், பவித்ரோத்சவம் மற்றும் வார்சிக மகோத்சவ விழா, 26ம் தேதி, மூலவர், திரு மஞ்சனத்துடன் துவங்கியது. 27ம் தேதி காலையில், பவித்ரம் சாற்றுதல், யாகசாலை பிரவேசம் நடந்தது.
மாலையில் கும்ப பூஜை, சாற்று முறை நடந்தது. நேற்று 30ல், காலை, 90 திருவாதரனம் நடந்தது. குலதெய்வ வழிபாடு செய்வோர், சேவா சங்கத்தினர் திரளாக பங்கேற்றனர். இன்று 31ல், காலை யில் கும்ப பூஜையும், மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.