அன்னுார் செல்வ நாயகி அம்மனுக்கு சக்தி பெருவேள்வி
அன்னுார்:பிள்ளையப்பம்பாளையம், செல்வநாயகியம்மன் கோவிலில் முப்பெரும் விழா நடந்தது. பழமையான செல்வ நாயகியம்மன் கோவிலில், கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
மண்டல பூஜை நிறைவு விழா, தமிழ் முறை சக்தி பெருவேள்வி, ஆவணி மாத அமாவாசை ஆகியவை இணைந்து முப்பெரும் விழாவாக நேற்று 30ல், நடந்தது.
செல்வநாயகியம்மனுக்கு தமிழ் முறைப்படி, சக்தி பெருவேள்வி நடத்தப்பட்டது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் ஆகியோர் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கடந்த, 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழில், 90 மதிப்பெண்களுக்கு மேலும், மற்ற பாடங் களில், 100 மதிப்பெண்களும் பெற்ற மாணவ, மாணவியருக்கு, தென்சேரிமலை முத்துசிவராம சாமி அடிகள், பழனி சாது சண்முக அடிகள் ஆகியோர், பதக்கம் மற்றும் சான்று அளித்து கவுரவித்தனர்.