உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லடம் பிரத்யங்கிரா கோவிலில் சிறப்பு வழிபாடு

பல்லடம் பிரத்யங்கிரா கோவிலில் சிறப்பு வழிபாடு

பல்லடம்:பல்லடத்தை அடுத்த வெங்கிட்டாபுரத்தில், ஸ்ரீஅத்வண பத்ரகாளி பீடம் உள்ளது. அங்கு, மூலவராக ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி அருள்பாலித்து வருகிறார்.

அமாவாசையை முன்னிட்டு, நேற்று 30ல், சிறப்பு வழிபாடுகள், வேள்விகள் நடந்தன.முன்னதாக, மங்கள சண்டி யாகத்துடன், அமாவாசை வழிபாடு துவங்கியது.

துஷ்ட சக்திகளை அழித்து, சத்ரு பயத்தை போக்கி, வியாபார விருத்தி அளிப்பதற்காக, பிரத்தி யங்கிரா தேவிக்கு வரமிளகாய் மூலம் வேள்வி நடந்தது. தங்க கவச அலங்காரத்தில், பிரத்யங் கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல், பல்லடத் தை அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீமகா ம்ருத் யுஞ்ஜய ஹோமம், நவகிர ஹோமங்கள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !