தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்
தென்காசி : தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயிலில் வரும் 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தென்காசியில் சித்ரா நதியின் கரையில் பொருந்திநின்ற பெருமாள் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள இக்கோயிலில் வரும் 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 6ம் தேதி ஆச்சார்யா அழைப்பு, அனுக்ஞை, மகா சங்கல்பம், ஆச்சார்ய வர்ணம், பகவத் பிரார்த்தனை, புன்யாகவாசனம், வாஸ்துஹோமம், கொடிமரம் பிரதிஷ்டை, சக்கரத்தாழ்வார் பிரதிஷ்டை, அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, கும்பபூஜை, கலாகர்ஷணம், ரஷாபந்தனம், சயனாஸ்தரணம், உக்த ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, வேதகோஷம் ஆகியன நடக்கிறது. 7ம் தேதி காலை புண்யாக வாசனம், நித்யா ராதனம், உக்தஹோமம், பூர்ணாகுதி, அதிவாஸஹோமம், அஷ்டபந்தனம், பிம்பசுத்தி, சதுர்வம்சதி, கலச ஸ்நபனம், தீபாராதனை, சாற்றுமுறை கோஷ்டி, மாலை ஸந்தயாரசை, தீபாராதனை, யனாதி, வாஸம், உக்தஹோமம், பூர்ணாகுதி, வஸோர், தாராஹோமம், திருவாரர்தனம், வேதகோஷம் ஆகியன நடக்கிறது. கும்பாபிஷேக நாளான 8ம் தேதி காலை 6 மணிக்கு புண்யாகவாசனம், ஹோமம், பூர்ணாகுதி, ஸமாநோபணம், யாத்ராதானம், ஆலய பிரதிஷினணம், காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகா கும்பாபிஷேகம், தசதரிசனம், திருவாராதனம், சாற்றுமுறை, பிரம்ம கோஷம், கோஷ்டி ஆகியன நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை ஸாயரட்சை, தீபாராதனை, கருடசேவை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை ஸ்ரீவைகானஸ ஆகம விதிமுறைப்படி இலத்தூர் வாசுதேவகோவிந்தராஜ பட்டாச்சாரியார் மற்றும் கடையநல்லூர் பாலகிருஷ்ணராஜகோபால பட்டாச்சாரியார் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.