பெருமாள் கோவில்களில் ராமநவமி கோலாகலம்
ADDED :5033 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் ராமநவமியையொட்டி சிறப்பு பூஜைகள் கோலாகலமாக நடந்தது. வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமியையொட்டி சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதேபோல, வேதாரண்யேஸ்வரர் கோவில், நாகக்குடையான் பெருமாள் கோவில், கள்ளிமேடு, கோவில்பத்து உள்ளிட்ட இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் ராமநவமி விழா சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதனால், பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நேற்று முன்தினம் களைகட்டியது.