மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
2220 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
2220 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, விருத்தாசலம் ஆழத்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி, அருகம்புல், மலர் மாலைகளால் அலங்கரித்து மகா தீபாரா தனை நடந்தது.விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் விநாயகர், கொளஞ்சியப்பர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தன காப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை நடந்தது.விருத்தாசலம், தெற்கு பெரியார் நகர், வரசித்தி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷே கம் செய்து, சந்தன காப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது.விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்மண்டபத்தில் சித்தி விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் சித்தி, புத்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும், கடலுார், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
2220 days ago
2220 days ago