உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலையில், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு: கொடி அணிவகுப்பு நடத்திய போலீசார்

உடுமலையில், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு: கொடி அணிவகுப்பு நடத்திய போலீசார்

உடுமலை:உடுமலையில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து,  போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.உடுமலை, சப்-டிவிஷனுக்குட்பட்ட  போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து  முன்னணி, வி.எச்.பி., இந்து சாம்ராஜ்யம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள்  மற்றும் பொதுமக்கள் சார்பில், 400க்கும் மேற்பட்ட சிலை கள், நேற்று 2ம் தேதி பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளன.இன்று 2ம் தேதி முதல், வரும், 4ம் தேதி வரை, உடுமலை, எரிசனம்பட்டி, குடிமங்கலம், மடத்துக்குளம், கணியூர், கொமரலிங்கம் என பல்வேறு பகுதிகளில், விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, உடுமலை பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இதனை உணர்த்தும் வகையில், போலீஸ்  கொடி அணி வகுப்பு, நேற்று 2ம் தேதி உடுமலையில் நடந்தது.போலீஸ் கொடி அணிவகுப்பில், ஏ.டி.எஸ்.பி.,க்கள், குணசேகரன், ஆசைத்தம்பி,  டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார்,  சிறப்பு அதிரடிப்படை போலீசார் என, 175 பேர் பங்கேற்றனர்.உடுமலை போலீஸ்  ஸ்டேஷன், குட்டைத்திடலில் துவங்கிய, கொடி அணிவகுப்பு, சதாசிவம் வீதி,  தலைகொண்டம்மன் கோவில் வீதி, எம்.பி., நகர், கொல்லன்பட்டறை, பொள்ளாச்சி  ரோடு, பழநி ரோடு வழியாக வந்து, பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !