உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிச்சியில், விநாயகர் சிலை விசர்ஜனம்

குறிச்சியில், விநாயகர் சிலை விசர்ஜனம்

போத்தனுார்:குறிச்சியில், சிவசேனா சார்பில் வைக்கப்பட்ட வேல்விநாயகர்  சிலை, நேற்று 2ம் தேதி விசர்ஜனம் செய்யப்பட்டது.குறிச்சி பஸ் ஸ்டாப் பகுதியிலுள்ள, கற்பக வினாயகர் கோவில் அருகே,சிவசேனா சார்பில், ஏழரை அடி உயர, வேல் விநாயகர் சிலை அமைக்கப் பட்டது.

இதனை நேற்று 2ம் தேதி காலை, முருகனடிமை நீலமலை சித்தர் பிரதிஷ்டை செய்து வைத் தார். தொடர்ந்து சிறப்பு வழிபாடு, அன்னதானம், மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.மாலையில் விசர்ஜன ஊர்வலத்தை, இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) நிறுவன தலைவர் ஸ்ரீதரன் கொடியசைத்து, துவக்கி வைத்தார்.  

குறிச்சி ரவுண்டு ரோடு, அரவான் கோவில், ஜி.கே.ஸ்கொயர் மற்றும் பொள்ளாச்சி  மெயின் ரோடு வழியே, ஊர்வலம் குறிச்சி குளத்தை சென்றடைந்தது.அங்கு  விநாயகர் விசர்ஜனம் செய்யப்பட்டார். சிவசேனா மாவட்டதலைவர் கிட்டாமணி,  94வது வார்டு கிளை தலைவர் சேகர், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !