உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை விநாயகர் சிலைகளில் ’மெட்டல் டிடெக்டர்’ சோதனை

கோவை விநாயகர் சிலைகளில் ’மெட்டல் டிடெக்டர்’ சோதனை

கோவை:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை நகர் மற்றும் புறநகர்  பகுதிகளில், பிரதி ஷ்டை செய்யப்பட்டுள்ள, விநாயகர் சிலைகளுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது; சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில்,  மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை நகர் மற்றும் புறநகரில், இந்து அமைப்பினர் சார்பில், ஆயிரத்து, 800க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.  

இச்சிலைகள் ஒவ்வொரு பகுதி வாரியாக, நாளையும், வரும் 6ம் தேதியும்  அருகில் உள்ள குளங்களில், விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.விசர்ஜனம் செய்யும்  வரை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில், பாதுகாப்புக்காக,  2,000க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிலைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த, மாநகரில், நான்கு தனிப்படைகள்  அமைக்கப் பட்டுள்ளன.இப்படையினர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம், சிலைகள்  அருகே சோதனை நடத்தி வருகின்றனர்; வரும் 6ம் தேதி வரை, தொடர்  சோதனை நடத்தப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !