அன்னுார் சித்தி விநாயகருக்கு கும்பாபிஷேக விழா
ADDED :2224 days ago
அன்னுார்:குப்பனுார் ஊராட்சி, சொலவம்பாளையம், சித்தி விநாயகர் கோவிலில், ஆயிரங்கண் மாரியம்மன், மாகாளியம்மன் தெய்வங்கள் உள்ளன. இங்கு பல்வேறு திருப்பணிகள் செய்யப் பட்டன. கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் (செப்., 1ல்) வேள்வி பூஜையுடன் துவங்கியது. இரவு கோபுர கலசம்வைத்தல் நடந்தது. நேற்று (செப்., 2ல்) அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது.
காலை 8:45 மணிக்கு, சித்தி விநாயகர், ஆயிரங்கண் மாரியம்மன் மற்றும் மாகாளியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
விஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை தலைவர் ஆறுமுகசாமி உள்ளிட்ட, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.