எல்லாம் இறைவன் விருப்பம்
ADDED :2231 days ago
ஸெய்யதுனா தாவூத் என்பவர் கவசம் விற்பனை செய்யும் வியாபாரி. அவரது மனைவி, வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை தன்னிடம் தரும்படி கேட்டிருந்தார். தாவூத்தும் சம்மதித்தார். ஆனால் சந்தையில் யாரும் கவசம் வாங்க வரவில்லை. அவரது மனைவி ஏமாந்து போனார்.
“இதெல்லாம் ஒரு பிரச்னையா? நாளை விற்று பணம் தருகிறேன்” என்றார் தாவூத். மறுநாளும் இதே நிலை நீடித்தது. கவசம் விற்கவில்லை. வருந்திய தாவூத்,“இது என்ன சோதனை? நான் தவறு ஏதும் செய்யவில்லையே” என பிரார்த்தித்தார்.
“திறமைசாலி என உங்களை நீங்களே நினைத்துக் கொண்டு, விற்று வருவதாக சொன்னீர்கள். இன்ஷா அல்லாஹ் (இறைவனின் விருப்பமிருந்தால்) என்று சொல்லவில்லை. எனவே தான் கவசம் விற்கவில்லை” என பதில் கிடைத்தது. இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும் என்று யார் செயல்படுகிறாரோ, அவருக்கு எல்லாம் நல்லதாக நடக்கும்.