உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரன்குன்று கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

குமரன்குன்று கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

அன்னூர் : குமரன்குன்று கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடக்கிறது. குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில் 26ம் ஆண்டு தீர்த்தக்காவடி தேர்த்திருவிழா நடக்கிறது. 3ம் தேதி இரவு தீர்த்தக்காவடி குழு பக்தர்கள் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலிலிருந்து கொடு முடி புறப்பட்டு செல்கின்றனர். 4ம் தேதி கொடுமுடியில், காவிரி ஆற்றில் புனித தீர்த்தம் எடுத்து, மகுடேஸ்வரர் ஆலயத்தை தரிசிக்கின்றனர். அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலிலிருந்து 5ம் தேதி காலை 5.30 மணிக்கு தீர்த்த காவடி பக்தர்கள் பாதயாத்திரையாக குமரன்குன்று செல்கின்றனர். காலை 10.00 மணிக்கு கோவிலில் காவடிகள் சமர்ப்பிக்கப்பட்டு, கொடுமுடியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. புதியதாக வேங்கை மரத்தில் உருவாக்கப்பட்ட சித்திரத்தேரில் கிரிவலம், மதியம் 12.00 மணிக்கு நடக்கிறது. சரவணம்பட்டி சித்தர் துரைசாமி அருளுரை வழங்குகிறார். ஏற்பாடுகளை தீர்த்தக்காவடி குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !