ஆர்.கே.பேட்டை விநாயகரை வரவேற்கும் தாமரை குளம்
ஆர்.கே.பேட்டை:சதுர்த்தியில் பக்தர்கள் வீடுகள் மற்றும் வீதியில் வைத்து வழிபட்ட விநாய கர் சிலைகள், இன்று 3ல் முதல், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. நீர்நிலைகள் வறண்டு கிடக்கும் நிலையில், சில ஆண்டுகளாக, குளமாக மாறியுள்ள பாறை குவாரி தான் கைகொடுத்து வருகிறது.விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நேற்று 2ல் கொண்டாடப்பட்டது. பக்தர்கள் தங்களின் வீடுகளிலும், தெருக்களிலும் பல்வேறு அவதார ங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
இன்று 3ல் முதல், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்க உள்ளனர்.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் ஏரி, குளங்கள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன.
இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம் பகுதியில், பாறை குவாரியில், தண்ணீர் தேங்கி, குளம் போல், காட்சியளிக்கிறது.இந்த குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் தான், சில ஆண்டுகளாக, சுற்றுப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.இதனால், இன்று 3ல் முதல், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த குவாரியில் விழாக்கோலம் தான்.