உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கார்த்திகேயன் தேவஸ்தான விடுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை

திருத்தணி கார்த்திகேயன் தேவஸ்தான விடுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலின் கார்த்திகேயன் குடிலில்,  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வராததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.திருத்தணி  முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், தணிகை  இல்லம், கார்த்திகேயன் குடில் மற்றும் சரவண பொய்கை ஆகிய தேவஸ்தான  விடுதிகள் ஏற்படுத்தி, குறைந்த வாடகையில் அறைகள் விடப் படுகின்றன. இங்கு,  பக்தர்கள் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குப்படுகிறது.

இந்நிலையில்,  கார்த்திகேயன் குடிலில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், ஒரு  மாதமாக வேலை செய்யாததால் குடிநீர் கிடைப்பதில்லை. விடுதியில் தங்கும்  பக்தர்கள் ஏமாற்றத்துடன் அருகில் உள்ள கடைகளில் பணம் கொடுத்து, குடிநீர்  பிடித்து வருகின்றனர். எனவே, கோவில் நிர்வாகம் உடனடியாக இயந்திரத்தை  பழுது பார்த்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என, பக்தர்கள்  எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !