பூமாயி அம்மன் கோயிலில் மகா நவசண்டி யாகம்
ADDED :2232 days ago
திருப்புத்துார்:திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் மகா சண்டியாகம் நேற்று காலை துவங்கியது.
பூமாயி அம்மன் கோயில் யாகசாலை மண்டபத்தில் நேற்று காலை 8:00 மணிக்கு பூர்வாங்க பூஜை துவங்கின. விநாயகர் பூஜை, கணபதி ேஹாமம் நவக்கிரக, லெட்சுமி ஹோமம் நடந்தது. பின்னர் மாலை விநாயகர்,தீபலெட்சுமி, சங்க பூஜை நடந்து அம்பாள் ஆவாகனம் நடந்தது. தொடர்ந்து நவாக் ஷா ஹோமம் முடிந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.நவசண்டி ஸ்லோகங்கள் 700, 13 அத்தியாயங்கள் அம்பாளுக்கு செய்யப்படும் நவசண்டியாகம் நோய் நிவர்த்தியாகவும், பிறர் தொந்தரவு நீங்கவும், பஞ்சபூதங்கள் கஷ்டம் அகலவும் செய்யப்படுகிறது.