உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துடியலுாரில் விசர்ஜன ஊர்வலம் குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்

துடியலுாரில் விசர்ஜன ஊர்வலம் குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே உள்ள வெள்ளக்கிணறு குளத்தில், விநாயகர் சிலை களை கரைக்க, கோவை மாநகராட்சி சார்பில், நீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

பெரியநாயக்கன் பாளையம், துடியலுார் வட்டாரத்தின் சார்பில், இந்து முன்னணி, 144, இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத், 24, ஸ்ரீதர், 8, வி.எச்.பி., 36, அகிலபாரத இந்து மகா சபா, 19, இந்து பாரத சேனா, 11, பாரத் சேனா, 15 மற்றும் பொதுமக்கள் சார்பில், 20, என, மொத்தம், 277 சிலை கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து, இரண்டு நாட்கள் பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தன. இன்று 4ம் தேதி காலை, துடியலுார் பஸ் ஸ்டாண்டில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. இதில், இ.மு., மாநில செயலாளர் கிஷோர், வாராஹி மணிகண்ட சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.விநாயகர் விசர்ஜனத்திற்காக, வெள்ளக்கிணறு குளத்தில், தண்ணீர் இல்லாததால், குளத்தின் நடுப்பகுதி யில் உள்ள குழியை துாய்மைப்படுத்தி, அதில், கோவை மாநகராட்சி உதவியுடன், லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !