உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நொளம்பூர் வறண்ட குளக்கரையில் சோகத்தில் பிள்ளையார்

நொளம்பூர் வறண்ட குளக்கரையில் சோகத்தில் பிள்ளையார்

நொளம்பூர்:தண்ணீர் தட்டுப்பாட்டை மையமாக வைத்து, விநாயகர் சதுர்த்திக்கு கண்காட்சி அமைத்துள்ளது, அனைவரையும் கவர்ந்துள்ளது.

நொளம்பூர், சக்தி நகர், நிர்விக்னா லட்சுமி குடியிருப்பில் வசிப்பவர் நந்தினி வெங்கடேசன், 46. தன் இல்லத்தில், எட்டு ஆண்டுகளாக, நவராத்திரி விழாவை முன்னிட்டு, கொலு அமைத்து வருகிறார்.3,500 சிலைகள்ஒவ்வொரு முறையும், அப்போதைய பிரச்னையை முன்னிலைப் படுத்தி, இவர் கொலு அமைப்பது வாடிக்கை. இவரிடம், 3,500க்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகள் உள்ளன.

இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை. இதனால், இவர் வீட்டை, ’பிள்ளையார் கொலு வீடு’ என, அப்பகுதிவாசிகள் அழைக்கின்றனர்.வடிவமைப்புஇவர், ஐந்து ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வீட்டின் இரண்டாவது மாடியில், பிள்ளையார் கண்காட்சி நடத்தி வருகிறார். இந்தாண்டு கண்காட்சி, நேற்று துவங்கி, 4ம் தேதி, மாலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை, பொதுமக்கள் கண்டு மகிழலாம்.

மேலும், இந்தாண்டு, தண்ணீர் பஞ்சத்தை மையமாக கொண்டு, வறண்டு காட்சியளிக்கும் குளமும், அதன் கரையில், இரண்டு கன்னத்தில் கை வைத்திருக்கும் விநாயகரையும் வடிவமைத்துள்ளார். இது அனைவரையும் வெகுவாக கவர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !