உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சியில் சிலை விசர்ஜன பாதுகாப்பு: கேமரா அமைப்பு

பொள்ளாச்சியில் சிலை விசர்ஜன பாதுகாப்பு: கேமரா அமைப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பொள்ளாச்சி சரகத்தில் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், 79, மகாலிங்கபுரம், 29, வடக்கி ப்பாளையம், 27, நெகமம், 82, கோமங்கலம், 35, நகர மேற்கு, 53 உள்பட மொத்தம், 344 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இன்று 4ம் தேதி துவங்கி, 6ம் தேதி வரை விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.

இதில், வீண் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.டி.எஸ்.பி., சிவக்குமார் கூறியதாவது:விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. பதட்டமான பகுதிகளாக கருதப்படும் சூளேஸ்வரன்பட்டி செம்பா கவுண்டர் காலனி உள்பட்ட ஏழு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.விசர்ஜன ஊர்வல பாதையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.

இது தவிர, மொபைல் கேமரா மூலம் ஊர்வலத்தை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளன. ஊர்வலத்துக்கென கடந்தாண்டு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் சிலை களை, எடுத்துச் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது, வாகனங்களில் கட்டாயம் ஒலி பெருக்கி வைக்கக்கூடாது. ரோட்டின் இடது பக்க ஓரமாக மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும்.

ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு, மாலை, 6:00 மணிக்குள் விசர்ஜனம் செய்ய வேண் டும். மாலை, 6:00 மணிக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டாது.பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக கோஷமிடக்கூடாது.

ஊர்வலத்தின் போது, பட்டாசு வெடிக்க அனுமதியில்லை. நிபந்தனைகளை மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊர்வலத்தில் வரும் நபர்கள் குடிபோதையில் இருக்க கூடாது. குடிபோதையில் யாராவது இருந்தால், அவர்களை வெளியேற்றும் போது போலீசாருக்கு விழாக்குழுவினர் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !