உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஸ்ரீஅனுமந்தராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர் ஸ்ரீஅனுமந்தராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர்:பழமைவாய்ந்த இடுகம்பாளையம் ஸ்ரீஅனுமந்தராய சுவாமி கோவில், கும்பாபிஷேக விழா, நாளை 5ம் தேதி நடைபெறுகிறது.

கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில், வியாசராயரால், 750 ஆண்டுகளுக்கு முன், சுயம்பு பாறையில், புடைப்பு சிற்பமாக அனுமந்தராய சுவாமி கோவில் அமைக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேக விழா, நாளை நடைபெற உள்ளது.

விழாவையொட்டி, நேற்று 3ம் தேதி மாலை, 4:30 மணி முதல், 8:30 மணி வரை, முளைப்பாலி கை ஊர்வலம் நடைபெற்றது. இன்று 4ம் தேதி காலை, 6:00 மணிக்கு, திப்பள்ளி எழுச்சி, திருப் பாவை, திவ்யபிரபந்தம் சேவையும், வேதபாராயணம் ஹோமம், உற்சவர் திருமஞ்சனம், திருவாராதனம், பூர்ணாஹூதி சாற்றுமுறை நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு, ஹோமம், வேதபாராயணம், சாற்றுமுறையும், மாலையில், நிமிலோன் நயனம், கலஸதாபனம், உற்சவர் யாகசாலை பிரவேசம் நடைபெறுகிறது.வரும், 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கும்ப உத்தாபணம் நடக்க உள்ளது. காலை, 9:15 முதல், 10:15 மணி வரை, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர், சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமி, பேரூர் ஆதீனம் முருதாசல அடிகளார் பங்கேற்கின்றனர்.கும்பாபிஷேக விழா வையொட்டி, காலை, 10:30 மணி முதல், அன்னதானமும், தினசரி, காலை, 11:00 முதல், 12:00 மணி வரை, சுற்றுவட்டார பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடைபெறும்.இன்று 4ம் தேதி இரவு, 7:00 முதல் 9:00 மணி வரை, கும்பகோணம் ஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜின், ஸ்ரீராமநாம சங்கீர்த்தன பஜனை நடக்கிறது.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, இடுகம்பாளையம் ஸ்ரீஅனுமந்தராயன்சுவாமி கோவில் தமிழ்மாதம் முதல் சனிக்கிழமை விழாக்குழுவினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !