உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலுாரில் விநாயகர் ஊர்வலம்

மேலுாரில் விநாயகர் ஊர்வலம்

மேலுார்: மேலுாரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மகா சபா  சார்பில் மாநில துணை தலைவர் செல்லத்துரை, மாவட்ட தலைவர்  ரமேஷ்பாண்டியன் தலைமையில் விநாய கர் ஊர்வலம் நடந்தது. சிவன்  கோயிலில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக மண்கட்டி தெப் பக்குளத்திற்கு  கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி., மணி வண்ணன்,  ஏ.டி.எஸ்.பி., வனிதா, டி.எஸ்.பி., சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர்.

* எழுமலை:எழுமலை, வங்கி நாராயணபுரம், பெருமாள்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி பகுதிகளில் 31 விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். நேற்று 3ம் தேதி மாலை அனைத்து சிலைகளும், எழுமலை முத்தாலம்மன் கோயில் முன் கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

பா.ஜ., நிர்வாகிகள் பொன் கருணாநிதி, மாத்துாரான், சாந்தகுமார், தேனி வட்டார  இந்து முன்ன ணி தலைவர் காமராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர்  விஜயபாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஊர்வலம் நடந்தது. உசிலம்பட்டி  டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்எழுமலையில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் சங்கரலிங்காபுரம்,  பாப்பி நாயக் கன்பட்டி கிராமங்களில் இருந்து சிலைகளை கொண்டு வந்தால்  சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும், அந்தந்த கிராமங்களிலேயே  கரைத்துக்கொள்ள வேண்டும் எனவும் போலீ சார் அறிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு  பஸ்களை மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 வரை சிறைபிடித்தனர். போலீசார்  சமரசம் பேசி பஸ்களை மீட்டனர். தொடர்ந்து பேச்சு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !