உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் அருகே விதை விநாயகர் செய்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம் அருகே விதை விநாயகர் செய்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம்:காரமடையை அடுத்த புஜங்கனுாரில, விநாயகா வித்யாலயா  சி.பி.எஸ்.இ., பள்ளியில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பள்ளி தாளாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர்  நிர்மலாதேவி விழாவை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஹரிஹரசுதன்  முன்னிலை வகித்தார். மழலையர் பிரிவு மாணவ, மாணவியர் விநாயகர் போல்  வேடமிட்டு, கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

தொடக்கப்பள்ளி மாணவ,  மாணவியர் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி நுாற்றுக்கும் மேற்பட்ட  களிமண்ணாலான விதை விநாயகரை செய்து, மாணவர்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்  நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !