உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயக்கன்பாளையம், ராஜ கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பெரியநாயக்கன்பாளையம், ராஜ கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம், ராமகிருஷ்ணா லே-அவுட்டில் உள்ள,  ராஜகணபதி கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.

நிகழ்ச்சிகள் காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கின. காலை,  10:00 மணிக்கு அருள்மிகு வீரமாத்தியம்மன் கோவிலில் இருந்து, புண்ணிய நதி  தீர்த்தங்கள், முளைப் பாலிகைகள், மங்களப் பொருட்கள் ஊர்வலமாக எடுத்து  வரப்பட்டன.

மாலை, 5:00 மணிக்கு பூர்ணாஹூதியுடன் முதல் கால யாக பூஜைகள் நடந்தன. காலை, 5:00 மணிக்கு வேதிகா அர்ச்சனையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தன. ஸ்ரீநவசக்தி மஹா வாராஹி அம்மன் கோவில் பீடாதிபதி ஸ்ரீ வாராஹி மணிகண்ட சுவாமிகள் தலைமை வகித்து, கலசத்திற்கு புனித தீர்த்தங்களை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். சிருங்கேரி வித்வ மனோஜ்குமார் ஹெக்டே தலைமையில், சிவாச்சாரியார்கள் யாகசாலை வேள்விகளை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !