உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்மணியே கதை கேளு விநாயகர் கதையை கேளு

கண்மணியே கதை கேளு விநாயகர் கதையை கேளு

கோவை:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ்  சார்பில், ’கண்மணியே கதை கேளு’ என்ற தலைப்பில், குழந்தைகளுக்கு கதை  சொல்லும் நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் சிந்துசதன் அரங்கில் நடந்தது.

விநாயகர் குறித்து புராண கதைகளையும், வழிபாட்டு முறைகளையும்,  குழந்தைகளுக்கு சொற்பொழிவாளர் அமுதா கூறினார். ’விநாயகருக்கு யானை  தலை எப்படி வந்தது’ என்ற கதையை, அவர்கள் ஆச்சரியத்துடன்  கேட்டனர்.அமுதா பேசுகையில், ”தொழில்நுட்பம் இல்லாத காலத்தில்,  குழந்தைகள் விளையாடிய விளையாட்டுகள் இன்றில்லை.

அக்காலத்தில், வீட்டு  திண்ணையிலும், வாசலிலும், மந்தை வெளியிலும் குழந்தைகள் விளையாடிய  விளையாட்டுகள் ஆனந்தமானது. இன்றைக்கு ஸ்மார்ட் போனில் விளையாட் டுகள்  வந்து விட்டதால், தெருக்களில் குழந்தைகளை பார்க்க முடியவில்லை. பாரம்பரிய  விளையாட்டுகள் அழிந்து விட்டன,” என்றவாறு, ’கொலை கொலையா  முந்திரிக்கா’ என்ற விளையாட்டை, சொல்லிக்கொடுத்தார். நிகழ்ச்சியில், 100க்கும்  மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !