உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் மாவட்டத்தில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு

நாமக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பல்வேறு  இடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட, 800க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள், காவிரி  ஆற்றில் கரைக்கப் பட்டன.

நாடு முழுவதும், கடந்த, 2ல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து,  நகரம், கிராமப்புறம், சாலையோரம் என, பல்வேறு இடங்களில், சுவாமி சிலைகள்  வைத்து, பூஜிக்கப் பட்டன. நாமக்கல் மாவட்டம் முழுவதும், 655 சிலைகள் வைக்க  போலீசார் அனுமதி அளித் திருந்தனர்.

அவ்வாறு அமைக்கப்பட்ட சிலைகளுக்கு  சிறப்பு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அவற்றை, சரக்கு ஆட்டோ,  லாரி போன்ற வாகனங்களில் ஊர்வலமாக எடுத் துச் சென்று, நீர் நிலைகளில்  கரைக்கப்பட்டு வருகின்றன. மோகனூர், ப.வேலூர், பள்ளி பாளையம் காவிரி  ஆற்றில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் ஆற்றிலும் கரைப்பதற் காக  எடுத்துவரப்பட்ட சுவாமி சிலைகள், கரையில் வைத்து சிறப்பு பூஜை  செய்யப்பட்டன. தொடர்ந்து, தோளில் தூக்கிக் கொண்டு, ஆற்றுக்குள் சென்று  கரைக்கப்பட்டன. ஒரு அடி முதல், 15 அடி உயரம் வரை, மயில், சிங்கம், புலி,  பசுமாடு, ஐந்து தலைநாகம் போன்ற பல்வேறு வாகனங்களில் அமர்ந்த நிலையில்  உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தன.

மோகனூர் காவிரி ஆற்றில், மோகனூர், நாமக்கல், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி,  நாமகிரி ப்பேட்டை, மெட்டாலா, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி போன்ற பல்வேறு  பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட, 800க்கும் மேற்பட்ட சிலைகள்  கரைக்கப்பட்டன. அசம்பாவிதம் ஏற்படு வதை தவிர்க்க, மோகனூர் இன்ஸ்பெக்டர்  சுகுமார் தலைமையில், ஏராளமான போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர்  பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எஸ்.பி., அருளரசு, டி.எஸ்.பி.,க்கள் காந்தி,  பழனிசாமி ஆகியோர், பாதுகாப்பு பணிகள் குறித்தும், விநாயகர் சிலைகள்  கரைப்பது பற்றியும் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தனர். ஏராளமான பக்தர்கள்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !