உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கவல்லி கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

கெங்கவல்லி கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

கெங்கவல்லி: கெங்கவல்லியிலுள்ள, பழமையான கைலாசநாதர் கோவில்  சிதிலமடைந்ததால், அப்பகுதி மக்கள், சிவ பக்தர்கள் குழுவினர், நன்கொடை  வசூலித்து, ஐந்து லட்சம் ரூபாயில் சீரமைத்தனர். நேற்று 4ம் தேதி, அதன் கும்பாபிஷேக விழா நடந்தது.

காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. 8:00 மணிக்கு மேல், கைலாசநாதர், முருகன், விநாயகர், நவக்கிரகம், பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்துக்கு புனித நீரூற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. மாலையில், திருக்கல்யாணம், இரவு,  பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. கைலாசநாதர், காமாட்சி அம்மன், பரிவார  தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !