உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

ராஜபாளையத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

ராஜபாளையம், :ராஜபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 28 சிலைகளுடன் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் ராஜபாளையம் இந்து முன்னணி நகர தலைவர் சஞ்சீவி தலைமையில் நடந்தது.

சுகந்தம் ஆயில் மில் நிறுவனர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாயகூத்தன் ,ஆர்.எஸ்.எஸ், பா.ஜ., வி.எச்.பி., உள்ளிட்ட அமைப்புகளின் பொறுப் பாளர்கள் பேசினர். பஞ்சு மார்க்கெட்டில் ஆரம்பித்து காந்தி சிலை ரவுண்டானா, அம்பலப்புளி பஜார் வழியாக புது பஸ் ஸ்டாண்டு அடுத்த கருங்குளம் கண்மாய் வந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டது.ஊர்வலத்தை முன்னிட்டு ராஜபாளையம் டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமை யில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !