உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை முத்தாலம்மன், கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை முத்தாலம்மன், கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை:வடமதுரை ரெட்டியபட்டி லக்கன்தெருவில் விநாயகர்,  தொட்டிச்சியம்மன், முத்தால ம்மன், கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்  நடந்தது.நேற்றுமுன்தினம் (செப்., 4ல்) மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்பு, கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று 5ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகள் முடிந்ததும், கடங்க ள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல்  ஆதிகாளியம் மன் கும்பாபிஷேக குழு தலைமை நிர்வாகி பிரசன்ன வெங்கடேச  அய்யர் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.  வடமதுரை, ரெட்டியபட்டி, லக்கன் தெரு, வெள்ளமடை உட்பட திரளான பக்தர்கள்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !