மூலநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில், உமையபார்வதி சமேத மூலநாதர், அகஸ்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் மற்றும் மாரியம்மன் கோவிலில், நாளை (8ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு, முதல் கால பூஜை துவங்கியது.
நேற்று இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை, நான்காம் கால பூஜை மற்றும் ஐந்தாம் கால பூஜை நடந்தது. நாளை 8ம் தேதி, காலை 4;00 மணிக்கு ஆறாம் கால பூஜை நடக்கிறது. கடம் புறப்பாடாகி,காலை 7:10 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில், எம்.எல்.ஏ., பாண்டியன், டி.எஸ்.பி., கார்த்திகேயன், ஓய்வு பெற்ற சுங்கவரித்துறை துணை ஆணையர் அருணாச்சலம் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, அகத்தியம் பவுண்டஷேன் நிர்வாகிகள், அகஸ்தியம் ஈஷ்வர் ராஜலிங்கம், அர்ச்சனா ஈஷ்வர், லோக்நாத் ஈஷ்வர், ரிஷிநாத் ஈஷ்வர், பெருமாள் ராஜலிங்கம், சக்திவேல் தணிகாசலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.