உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் துணை முதல்வர் வழிபாடு

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் துணை முதல்வர் வழிபாடு

 மயிலாடுதுறை : திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் துணை முதல்வர் வழிபாடு நடத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களும் சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடில், சுவேதாரண்யேஸ்வரர் சமேத பிரம்ம வித்யாம்பிகை கோவில் உள்ளது. நவகிரகங்களில், புதன் ஸ்தலமாக விளங்கும் இத்தலத்தில், சிவபெருமான் அகோரமூர்த்தி, நடராஜராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்று தீர்த்தம், மூன்று மூர்த்திகளை கொண்ட ஸ்தலமாகும்.இங்கு வழிபாடு செய்தால் சிறந்த ஞானம், தொழில் சிறக்கும்; அரசியலில் மேன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், வியாழன் இரவு வந்தார்.

நாகை கலெக்டர் சுரஷே்குமார் வரவேற்றார். கோவில் நிர்வாகம் சார்பில், பாபு குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்றனர்.துணை முதல்வர் பன்னீர்செல்வம், கோவிலில் சுவாமி, அம்பாள், நடராஜர், அகோர மூர்த்தி மற்றும் புதன் பகவான் சன்னிதிகளில் தரிசனம் செய்தார். அவருடன் வந்த அமைச்சர்கள் தங்கமணி, மணியன், காமராஜ், சரோஜா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் ராமநாதன், ரங்கநாதன் ஆகியோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள், திருவெண்காடில் நடைபெற்ற சீர்காழி, எம்.எல்.ஏ., பாரதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !