நினைத்ததை நிறைவேற்றும் கேது அம்ச விநாயகர்
அருப்புக்கோட்டை: பிரச்னை இல்லாத வாழ்க்கை வாழும் போது மனிதன் கடவுளை நினைப் பதில்லை. வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் வரும் போது தான் மனிதன் கடவுளை தேடி ஓடுகிறான். மனமுருக பிரார்த்தனை செய்கிறான். காரியம் நடந்த உடன் நேர்த்தி கடன் செலுத்துகிறான்.
ஆனால் தெய்வங்கள் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை. தன்னை நாடி, தேடி வரும் பக்தர் களுக்கு கேட்டதை, நினைத்ததை அருள்புரிகின்றனர்.
அந்தவகையில் அருப்புக்கோட்டை திருநகரம் சிவானந்தபுரம் தெருவில் கேது அம்ச விநாய கர் கோயில் உள்ளது. இது ஒரு நூற்றாண்டு புகழ் வாய்ந்த கோயில்.
இங்குள்ள விநாயகர் கேதுவுடன் இருப்பதால் விசேஷமானது. தென் மாவட்டங்களில் இது போன்ற அம்சத்துடன் விநாயகர் இந்த கோயிலில் தான் உள்ளது. சக்தி வாய்ந்த விநாயகர் பக்தர்கள் கேட்டதை நிறைவேற்றி தருகிறார். திருமண தடை நீங்க குழந்தை பாக்கியம் பெற போன்றவைகளுக்கு இந்த விநாயகர் ‘ஸ்பெஷலிஸ்ட்’ வெளிநாடுகளில் வேலை கிடைக்க விரும்புவோர் இங்கு வந்து வணங்கி சென்றால் உடனடியாக நடக்கிறது. என்று பலன் அடைந்தவர்கள் கூறுகின்றனர். கையில் எழுது கோலுடன் கேதுவுடன் இருக்கும் விநாயகரை தரிசித்து நல்ல பலனை பெறுங்கள்.