உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி, கொடைக்கானலில் விநாயகர் ஊர்வலம்

பழநி, கொடைக்கானலில் விநாயகர் ஊர்வலம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட 15 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கி கோட்டை குளத்தில் நிறைவடைந்தது.

மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கொடி அசைத்து துவக்கி வைத்தார். துணை பொதுச்செயலா ளர் தர்மா, மாவட்ட செயலாளர் மணிகண்டன், தலைவர் ரமேஷ் பங்கேற்றனர்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் இந்துமக்கள் கட்சி சார்பில்  இலங்கை மட்டக்களப்பு எம்.பி., சீனிதம்பி யோகேஸ்வரன் ஊர்வலத்தை துவங்கி வைத்தார். மாநில இளைஞரணி செயலர் குமரன், நகர செயலர் கார்த்திக், முன்னாள் நகராட்சி தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இரப்ராகிம் பங்கேற்றனர்.

மூஞ்சிக்கல் அரசு பள்ளி முன் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. டி.எஸ்.பி. ஆத்மாநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பழநி: பழநியில் இந்து மக்கள் கட்சி சிவசேனா, அகில பாரத இந்துமகாசபா சார்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பாதவிநாயகர் கோயிலுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து ஊர் வலமாக கொண்டு சென்று சண்முகநதியில் கரைத்தனர்.

வடமதுரை: சதுர்த்தி விழாவையொட்டி இந்து மக்கள் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் வடமதுரை, மோர்பட்டி, ரெட்டியபட்டி உள்பட பல ஊர்களில் செப்., 2ல் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன.

இவற்றில் 21 விநாயகர் சிலைகள் நேற்று (செப்., 6ல்) வடமதுரைக்கு சரக்கு வேனில் கொண்டு வரப்பட்டு தேரடி வீதிகளை சுற்றி ஊர்வலம் சென்றன. பின்னர் தும்மலக்குண்டு ரோட்டிலுள்ள நரிப்பாறை குளத்தில் கரைக்கப்பட்டன.

வடமதுரையில் நடந்த துவக்க விழாவிற்கு ஒன்றிய அமைப்பாளர் நாகராஜன், தலைவர் மருதமுத்து தலைமை வகித்தனர். மாநில அமைப்பு பொது செயலாளர் ரவிபாலன், இளைஞரணி செயலாளர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.

வேடசந்தூர்: வேடசந்தூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. அழகாபுரி குடகனாறு அணையில் சிலைகள் கரைக்கப்பட்டன.

மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். நிர்வாகிகள் கைலாசம், செல்வகுமார் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் விபூஷணன் வரவேற்றார். மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !