மதுரை விநாயகர் சிலை அக்னி கடலில் கரைப்பு
ADDED :2229 days ago
ராமேஸ்வரம்:செப்.,2ல் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை கடல், குளம், ஆறுகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விழாக் குழுவினர் கரைத்து வருகின்றனர்.அதன்படி மதுரை கீழவாசலில் உள்ள அரசமரம் விநாயகர் கோயிலில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத களிமண்ணில் உருவாக்கிய ஐந்தரை அடி உயர விநாயகர் சிலையை, விழா குழுவினர் லாரியில் ஏற்றி நேற்று (செப்., 6ல்) மாலை ராமேஸ்வரம் திருக் கோயில் அக்னி தீர்த்த கரைக்கு வந்தனர்.
பின் விநாயகருக்கு மகா தீபாராதனை நடத்தி, அக்னி தீர்த்த கடலில் கரைத்தனர். இதில் ராமநாத புரம் இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலர் ராமமூர்த்தி, நகர் செயலர் நம்புராஜன், மதுரை அரசமரம் விநாயாகர் சதுர்த்தி சங்க பொதுச்செயலர் கனநாதன், செயலர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.