விநாயகர் சிலைகள் கடம்பத்தூரில் கரைப்பு
ADDED :2338 days ago
கடம்பத்துார்:கடம்பத்துாரில், நேற்று (செப்., 6ல்), விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
கடம்பத்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 2ம் தேதி, விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதில், கடம்பத்துார், வெண்மனம்புதுார், அம்பேத்கர் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், விநாயகர் சிலைகள், நேற்று கரைக்கப்பட்டன.
இந்த விநாயகர் சிலைகளுக்கு, காலையில் ஆராதனை செய்யப்பட்டு,அப்பகுதி இளைஞர்களால், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.பின், கடம்பத்துார் - செஞ்சி பானம்பாக்கம் ஒன்றிய சாலையில் உள்ள, மூன்று கண் பாலம் பகுதியில், 10 பெரிய சிலைகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிறிய மண் சிலைகள் கரைக்கப்பட்டன.