உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஹிந்து பாரத் சேனா விநாயகர் சதுர்த்தி விழா

திருப்பூர் ஹிந்து பாரத் சேனா விநாயகர் சதுர்த்தி விழா

திருப்பூர்:ஹிந்து பாரத் சேனா சார்பில், திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்து. கடந்த, 2ம் தேதி முதல், விநாயகர் சதுர்த்தி விழா, நடந்து வந்தது. நேற்று (செப்., 6ல்) மாலை, ஆலாங்காட்டில் பொதுக்கூட்டம் நடந்தது.நகரில் வைக்கப் பட்டிருந்த சிலைகள், மேள, தாளத்துடன் ஊர்வலமாக ஆலாங்காட்டுக்கு எடுத்து வரப்பட்டன. பொதுக்கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் தம்பு தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜ், துணை தலைவர் பாலு உட்பட பலர் பேசினர்.

இணை அமைப்பாளர் கணேசன் வரவேற்றார். நிறுவன தலைவர் வீரா ராஜா, மாநில இளைஞர் அணி செயலாளர் ரவி, முருகன் அடிமை பாஸ்கரணந்த சுவாமிகள் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து, சிலைகள், சாமளாபுரம் குளத்துக்கு கொண்டு சென்று, கரைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !