உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்புமாவட்டத்தில் மழைவேண்டி விவசாயிகள் வழிபாடு

வத்திராயிருப்புமாவட்டத்தில் மழைவேண்டி விவசாயிகள் வழிபாடு

வத்திராயிருப்பு:மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மழையின்றி கடுமையான வறட்சி நிலவி வருவதால் விவசாயம் கடும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. விவசாயிகளும் விவசாய கூலி ஆட்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இதன்காரணமாக வத்திராயிருப்பு பகுதி விவசாயிகள் ஒன்றுதிரண்டு கோயில்களில் சிறப்பு பூஜை வைத்து வழிபாடு செய்தனர். வத்திராயிருப்பில் உள்ள முத்தாலம்மன் கோயில் , சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கருப்பசாமி கோவில், பேச்சியம்மன் கோயில்களில் ஒரே நேரத்தில் பூஜைகள் நடந்தது.

இலந்தைகுளம் பகுதி விவசாயி முத்துராமலிங்கம் வத்திராயிருப்பு விவசாயி சுந்தரராஜ பெருமாள், அக்கனாபுரம் விவசாயி ஜெயரட்சகன், தைலாபுரம் விவசாயி சீலமுத்து தலைமையில் அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வழிபாட்டில் கலந்து கொண்டனர். தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள், அலங்காரத்துடன் கோயில் முன் பொங்கலிட்டு வழிபாடு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !