உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்:

மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்:

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று 6ம் தேதி கடலுார் தேவனாம்பட்டிணம் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 2ம் தேதி, மங்கலம்பேட்டை மற்றும் அதனை சுற்றி யுள்ள கிராமங்களில் 60 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று 6ம் தேதி காலை 9:45மணியளவில்,விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. விருத்தாசலம் தொகு திமுன்னாள்எம்.எல்.ஏ., முத்துக்குமார் துவக்கி வைத்தார். முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

விழாக்குழு தலைவர் மணிகண்டன், இந்து முன்னணி ஒன்றியதலைவர் கமலக்கண்ணன், பா.ஜ., தொகுதி அமைப்பாளர் ராஜேந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக வந்து, காலை 11:20 மணியளவில் மசூதியை கடந்து சென்று, மாலை 5:00 மணியளவில், விநாயகர் சிலைகள்கடலுார் தேவனாம்பட்டிணம் கடலில் கரைக்கப்பட்டன.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., சந்தோஷ்குமார் தலைமையில், எஸ்.பி., ஸ்ரீ அபினவ், ஏ.எஸ்.பி., தீபாசத்யன், ஏ.டி.எஸ்.பி., பாண்டியன், 6 டி.எஸ். பி., 20இன்ஸ்பெக்டர்கள், 69சப் இன்ஸ்பெக்டர், 180ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட 1050 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !