உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலில் பங்குனி விழா துவக்கம்

சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலில் பங்குனி விழா துவக்கம்

கடையநல்லூர் : சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை (4ம் தேதி) துவங்குகிறது. சாம்பவர்வடகரை சுவாமி ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நாளை (4ம் தேதி) மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள கருப்பசாமி, கடுத்தசாமி, கருத்தழகியம்மன், ஐம்பொன் திருமேனிகள் சிலைகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. குத்துக்கல்வலசை பாலாஜி ரியல் எஸ்டேட் மற்றும் சாய்ராய் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் முருகேசன், செல்வி முருகேசன் முன்னிலை வகிக்கின்றனர். வரும் 5ம் தேதி பங்குனி உத்திரதினத்தன்று காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. 10.30 மணி முதல் 11 மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், அதனை தொடர்ந்து கருப்பசாமி, கடுத்தசாமி, கருத்தழகியம்மனுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் கோயிலில் அருள்பாலித்து வரும் அருணாச்சலேஸ்வரர் - உண்ணாமலையம்மாள் திருக்கல்யாணம் நடக்கிறது. கடையநல்லூர் அரசு கான்ட்ராக்டர் ராசா கன்ஸ்ட்ரக்சன் அருணாசலம், பரமேஸ்வரி அருணாசலம் முன்னிலை வகித்து திருக்கல்யாணத்தை தொடங்கி வைக்கின்றனர். இரவு 7 மணிக்கு 18 திருப்படிகளுக்கும் பூஜைகள் நடக்கிறது. ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஊர்மேலழகியான் சுப்பிரமணியன், ஜோதி சுசிலா படி பூஜைகளை துவக்கி வைக்கின்றனர். திருவிழா ஏற்பாடுகளை சாம்பவர்வடகரை சுவாமி ஐயப்பன் கோயில் சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !