உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெருசலேம் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்

கரூர்: ஜெருசலேம் புனித பயணத்திற்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி,  அரசால் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை, கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். விண்ணப்பதாரர்கள் வரும், 30க்குள் விண்ணப்பிக்க  வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !