இரு கோவில்களில் உண்டியல் வசூல் ரூ.2.57 லட்சம்
ADDED :2229 days ago
ஈரோடு: ஈரோடு, ஆருத்ரகபாலீஸ்வரர் கோவில் வகையறா கோவிலான சக்தி விநாயகர் கோவில் முனிசிபல் காலனியில் உள்ளது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை, கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணப்படுகிறது. நேற்று முன்தினம், நான்கு உண்டியலில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டது. செயல் அலுவலர் கங்காதரன், அறநிலையத்துறை ஆய்வாளர் ஹரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. மொத்தம், 76 ஆயிரத்து, 437 ரூபாய் இருந்தது.
* இதேபோல், மொடக்குறிச்சி அருகே வேலம்பாளையத்தில் உள்ள குப்பியண்ணன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில், ஒரு லட்சத்து, 81 ஆயிரத்து, 268 ரூபாய் இருந்தது. இரு கோவில்களிலும், இரண்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 705 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.