மேல்பாக்கம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2555 days ago
திண்டிவனம்: மேல்பாக்கம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.திண்டிவனம் வட்டம், மேல்பாக்கம் கிராமத்தில், சித்தி விநாயகர், கோதையம்மன், அம்மச்சாரம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 9:30 மணிக்கு சித்தி விநாயகருக்கும், 10 மணிக்கு கோதையம்மன், அம்மச்சாரம்மன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழாவும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இதில், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., மாசிலாமணி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.