உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலுார் விநாயகர் கோவில் ஆண்டு விழா

சூலுார் விநாயகர் கோவில் ஆண்டு விழா

சூலுார்: சூலுார், கலங்கல் ரோடு, செல்வ சித்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இக்கோவிலில், 10ம் ஆண்டு விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜை முடிந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. தொடர்ந்து, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. செங்கத்துறை கோவில் கமிட்டியாரின் காவடி ஆட்டம், பக்தர்களின் மனதை கவர்ந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !