அன்னுார் அங்காளம்மன் ஆண்டு விழா
ADDED :2234 days ago
அன்னுார்: அன்னுார் சுயம்பு அங்காளம்மன் கோவில் ஆண்டு விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னுார், ஓதிமலை ரோட்டில், சுயம்பு அங்காளம்மன் கோவில் கடந்த ஆண்டு கட்டப்பட்டது. இதன் முதலாம் ஆண்டு விழா நேற்று முன்தினம் கோமாதா பூஜையுடன் துவங்கியது. கணபதி ேஹாமம், விஸ்வரூப தரிசனம் நடந்தது. மதியம் பவானி ஆற்றிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். சக்தி கரகம், அணிக்கூடை, வீச்சரிவாள், சாட்டை பிரம்பு ஆகியவற்றுடன் அம்மன் அழைத்தல் நடந்தது. இரவு திருவிளக்கு பூஜையும், அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனையும் நடந்தது. நேற்று காலையில், குபேர லட்சுமி ேஹாமம், 108 சங்கு அபிசேகம், மதியம் உச்சிகால பூஜை, அன்னபூரணி பூஜை நடந்தது.