உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்துார் பேச்சியம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா

முதுகுளத்துார் பேச்சியம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே நல்லுார்பேச்சியம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும். தொழிளாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டிகடந்த மாதம் மண்குதிரை செய்ய மேலக்கன்னிசேரியில் பிடிமண் வழங்கப்பட்டது. புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது.கிராமத்தில் தினந்தோறும் இளைஞர்கள் ஒயிலாட்டமும்,பெண்கள் கும்மியடித்தும் வந்தனர்.நேற்று 10ம் தேதி மாலை 4:00மணிக்கு மேலக்கன்னிச்சேரி கிராமத்தில் தயார் செய்யப்பட்ட குதிரை, தவளும் பிள்ளை உருவத்தை ஊர்வலமாக கிராமமக்கள் எடுத்து வந்தனர். பின்பு பேச்சியம்மன் கோயிலில் வைத்து குதிரை, தவளும் பிள்ளைகளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.கிராமமக்கள் கோயிலில் பொங்கலிட்டுநேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !