உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தூர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா

சாத்தூர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா

சாத்தூர் : சாத்தூர் மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்குதல் நடந்தது. சாத்தூர் மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, கடந்த மார்ச் 25 ல், துவங்கியது.தினமும் அபிஷேகம்,அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. நகரின் முக்கிய வீதிகள் அம்மன் வலம் வருதல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் மற்றும் பூக்குழி இறங்கும் விழா, கடந்த ஞாயிறு இரவு நடந்தது. இதையொட்டி வைப்பாற்றிலிருந்து பூஜாரி கரகம் எடுத்து வர, பக்தர்கள் பொங்கல் வைத்தும், அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, கயிறு குத்தி, முளைப்பாறி செலுத்தி வழிப்பட்டனர்.இதை தொடர்ந்து பாரிவேட்டை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதன் பின் திங்களன்று காலையில் கும்புடு போட்டு விழுந்து எழுந்தும், அங்கப்பிரதட்சணம், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா இசக்கி முத்து மற்றும் பல்வேறு சமுதாய மண்டகப்படியார்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !