உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

குளித்தலை எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

குளித்தலை: நாவல் நாயக்கன்பட்டி, எல்லையம்மன்கோவில் கும்பாபிஷேகத்தில்  திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலை பஞ்., நாவல்  நாயக்கன்பட்டியில் உள்ள எல்லையம்மன் நகரில் ஆதி விநாயகர், செல்வ  விநாயகர், பாலமுருகன், எல்லையம்மன் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய  கிராம மக்கள் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் (செப்., 11ல்), காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் எடுத்து வந்தனர். யாக சாலையில் மூன்று கால பூஜைகள்  செய்யப்பட்டன. நேற்று 12ம் தேதி காலை, 9:00 மணியளவில் கோபுர கலசத்தில்  சிவாச்சாரியார் புனிதநீர் ஊற்றினார். தொடர்ந்து, அபிஷேகம், தீபாராதனை  நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாக்குழு சார்பில்  அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !