லட்சுமிபாய் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
ADDED :2224 days ago
பரங்கிப்பேட்டை: பு.முட்லுார் துறவி லட்சுமிபாய் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. சுவாமி ஓங்காரநந்தா தலைமையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, ‘ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்’ புத்தகத்தை, சுவாமி ஓங்காரநந்தா வெளியிட அகத்தியம் பவுண்டேஷன் நிர்வாகி அகஸ்தியம் ஈஷ்வர் ராஜலிங்கம் பெற்றுக் கொண்டார். விழாவில், சுவாமி கோடீஸ்வரானந்தா, ஞானேஸ்வரி, அகத்தியம் பவுண்டேஷன் நிர்வாகி அர்ச்சனா ஈஷ்வர், சர்வாத்மானந்தா குருமகராஜ், ராம அனுமான் அறக்கட்டளை நிர்வாகி சீனு என்கிற ராமதாஸ் பங்கேற்றனர்.