திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா
ADDED :2503 days ago
சோழவந்தான்: திருவேடகம் ஏலவார் குழலியம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு கோயிலில் இருந்து விநாயகர், திருஞானசம்பந்தர், அமைச்சர் குலைச்சிறை நாயனார் வெண் குதிரையில் பவனி வந்து வைகையில் எழுந்தருளினர். பின் ஆற்றில் தங்கத்தால் செய்த திருப்பாசுர ஏட்டை சப்பரத்தில் வைத்து, புலவர் சொக்கலிங்கம் வேதம் முழங்க ஏடு எதிரேறும் விழா நடந்தது. தமிழகத்தில் இங்கு மட்டுமே இவ்விழா நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் சேவுகன், நிர்வாக அதிகாரி இளஞ்செழியன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.