பவானி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2227 days ago
கமுதி: கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பவானி அம்மன், சக்தி கணபதி அதன் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சங்கல்பம் பிள்ளையார் பூஜை, புண்யாக வாசனம், கணபதி ஹோமம், பூராணஹூதி, மாலையாக சாலை வலம் வருதல், இரவு திக் பூஜை, சன்னதி ஹோமம் மூல மந்திரம், திக் பூஜை, மஹா பூராணஹூதி தீபாராதனை, யாத்திரை பிரதிஷ்டை, மங்கள் வாத்தியம், கோமாதா பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்பாட்டுக்கு பின் பவானி அம்மன், சக்தி கணபதி, பரிவார கோயில்களின் கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டு, அன்தானம் நடந்தது. இரவு வாண வேடிக்கை, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடந்தது. கும்பாபிஷேகத்தை சர்வ சாதகம் நாராயணன் பட்டர், பாலாஜி சிவம் நடத்தினர். ஏற்பாடுகளை ஆலய திருப்பணிக்குழுவினர் செய்தனர்.