உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சிமாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

உச்சிமாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

 உடுமலை:உடுமலை அருகே தும்பலப்பட்டி ஊராட்சியில் உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 10ம்தேதி பக்தர்கள் திருமூர்த்திமலையிலிருந்து தீர்த்தம் எடுத்து திருவீதி உலா வந்தனர். கடந்த 11ம் தேதி  காலை, 6:00 மணிக்கு முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலையில், விநாயகர் வழிபாடு நடத்தி, கோ பூஜை நடந்தது.மாலையில், கும்ப அலங்காரம், சக்தி கலச பூஜை செய்யப்பட்டு, முதற்கால யாக பூஜை நடந்தது. 12ம்தேதி, காலையில் இரண்டாம் கால யாக  பூஜை, மாலையில் மூன்றாம் கால யாகபூஜை, கலசங்கள் சிறப்பு பூஜை நடந்தது.நேற்றுமுன்தினம் நான்காம் கால யாக பூஜை, காப்பு அணிவித்தல், வேள்வி நிறைவு பூஜையும், காலை, 8:15 மணிக்கு, மகாமாரியம்மன், உச்சிமாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகமும்  நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. நேற்று முதல், மண்டல பூஜை துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !